மக்கள் தயாரிக்கும் முதல் தமிழ் சினிமா

இது ஒரு கிரௌடு ஃபண்டிங் பிலிம்ரசிகர்களை தயாரிப்பாளர்களாக்கும் தமிழ் சினிமாவின் முதல் முயற்சி

 

ஏன்? தயாரிப்பாளர் இல்லாத கிரௌடு ஃபண்டிங்

1.தமிழில் இயக்கவே உங்களிடம் கையேந்துகிறேன்.
2.இந்த கதையை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை.
3.இந்த படத்தை வெளியிடும்போது வியாபார நிர்பந்தம் இருக்காது .
4.அரைநிர்வான காட்சிகளையும்,ஒரே மாதிரியான கதைகளையும் தூக்கி எறிய.
5.இது மக்கள் படம், மக்கள் தான் தயாரிக்க வேண்டும் .

நான்யார்?

   வணக்கம் நான் பழனிச்சாமி NO:102, 2வதுதளம், 12வதுதெரு, 2வதுசெக்டர், கேகே நகர், சென்னை-78. சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், நெய்க்காரபட்டி.கடந்த சில வருடங்களாகவே சினிமாவில்தான் வாழ்கிறேன். ஐந்து படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவமும் நான் இணை இயக்குநராக பணிபுரிந்த குருகுலம் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன். உயிரே போகும் பிரச்சனையாக! இருத்தாலும், ஒரு சினிமா பார்த்தால் எல்லாத்தையும் மறந்துவிடுவேன். ஏனென்றால்? என் உயிரே சினிமாதான். சினிமா என் அப்பா மாதிரி . என் அப்பா கொடுத்த நம்பிக்கையை சினிமாவும் கொடுத்தது. முதல் படத்தை இயக்கலாம் என்று யோசித்த போதே எது மாதிரியான கதைகளை இயக்கக்கூடாது என்பதையும் தீர்மானித்து விட்டேன். காரணம் தொடக்கத்தில் இருந்தே அர்த்தமில்லாத சினிமா மீது எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. சினிமா கூத்தடிக்க அல்ல. அது சமூக மாற்றத்திற்கான ஆயுதம் என்றே நம்புகிறேன். என் படத்தை நானே திரும்பிப்பார்க்கும் போது எனக்கே எந்தக் குற்ற உணர்ச்சியும் வந்து விடக்கூடாது. அப்படியொரு படத்தை எடுக்க வேண்டும். அதுதான் என் கணவு சினிமா. தமிழ்நாட்டில் இன்றைக்கு அழித்து ஒழிக்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனை டாஸ்மாக், தமிழ் மக்களை போதையில் மூழ்கடித்து மூச்சுத்திணற வைத்துக் கொண்டிருக்கிறது சாராயம். இன்றய நிலையில் இப்படியொரு கதையை படமாக்க தயாரிப்பாளர்களை தேடுவதே பாவம். ஏனென்றால் கார்ப்பரேட் சினிமா முதலாளிகள் சிறிய தயாரிப்பாளர்களை எப்படி கதறடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிக அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். மாற்று சினிமாவிற்கு வழி தேடிக்கொண்டிருந்த போதுதான் கன்னடத்தில் பவண்குமார் என்ற இயக்குநர் மக்களிடம் பணத்தை வசூல் செய்து லூசியா என்ற படத்தை எடுத்தார் அதோடு தனது அடுத்த படமான புகையிலையின் கேடுகளையும், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் C10 H14 N2 என்ற புகையிலையின் வேதியியல் மூலக்குறியீட்டை தலைப்பாகக் கொண்டு ஒரு கதையை உருவாக்கி அதே கிரௌடு ஃபண்டிங் முறையில் ரூ 1.80 கோடி வசூல் செய்து அதற்கு மக்களையே பங்குதாரர்களாக்கி படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார். அதே வழிமுறையைப் பின்பற்றி நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்றும், அது தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக இருக்கும் என்றுதான் மக்களிடம் கையேந்துகிறேன். நான் இப்படி கேட்கும் போதே என்னைப்பற்றி உங்களுக்கு பல கேள்விகள் தோன்றலாம். யார் இவன்? இவனை எப்படி நம்புவது? பணத்திற்காகவா? புகழுக்காகவா? அல்லது இதை வைத்து வேறு ஏதாவது ஆதாயம் தேடவா? என்று உங்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் உள்ளே இருக்கிறது. மாற்று சினிமாவுக்கு வழிகாட்டுங்கள்..

 

சினிமாவில் சொல்ல மறுக்கும் காட்சிகள்

    இதுவரை யாருமே சொல்லாத கதையை நான் சொல்லப் போகிறேன் என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. தமிழ்நாட்டு வீதிகளில் நித்தம் நித்தம் நீங்கள் பார்த்து வெறுத்து சலித்துப்போன உங்கள் கதை அல்லது உங்கள் பக்கத்து வீட்டுக்காரனின் வாழ்க்கைதான் இந்தப்படம். குட்டிச் சுவருக்குள் நிற்கிற கழுதை கூட குடிகாரன் பக்கத்திலே நிற்காது என்பார்கள் ஆனால் போதையில் தள்ளாடும் குடிகாரனை அவன் குடும்பமே தாங்கிப்பிடிக்கும் குடியின் கொடூரம் அவனை மட்டுமல்ல தாங்கிப்பிடித்த அவன் குடும்பத்தையும் அழிக்கிறது, அப்படி அழிந்து போனதுதான் எனது குடும்பமும். உண்மையில் அழுக்கு துடைப்பம் தான் வீட்டை சுத்தம் செய்கிறது. இந்தக்கதை எல்லோருக்கும் தெரியும் குடியால் அழிந்த எத்தனையோ பெரிய குடும்பங்கள், பெரிய மனிதர்கள், சினிமா பிரபலங்கள், இலக்கியவாதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் என்று பலரையும் பார்த்திருப்பீர்கள். அதேபோல சமூகத்தின் கடைநிலை ஊழியர்களான பிணவறைத் தொழிலாளர்கள், துப்புறவுத் தொழிலாளர்கள், மலம் அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் இடுகாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என்று சாராயம் எல்லா மட்டத்திலும் வேரூன்றி விட்டது. மனித வாழ்க்கை எவ்வளவு அழகான பூக்கடை குடியால் அது எப்படி சாக்கடையில் கலக்கிறது அதுதான் இந்தப்படம் இந்த ஒற்றை வரிக் கதையைத்தான் பூக்கடை என்று சினிமாவாக எடுக்கப் போகிறேன் வேறு எந்தப் புதுமையும் இல்லை. ஒரு குடிகாரனின் உக்கிரமான ருத்ரதாண்டவம் தனிய அன்றும் பின்னிரவை தாண்டிவிட்டது மயக்கம் கலந்த தூக்கம் பாதி, அழுகை பாதி என்று குடும்பமே துவண்டுபோய் கிடந்தோம் வழக்கம் போல யாரையும் சாப்பிட விடாமல் விழுந்துகிடந்தான் என் அண்ணன். அந்த இரவின் அமைதியை கெடுத்த விசும்பல் சத்தம் அடங்க நீண்ட நேரமானது. அந்தக் குடிகாரனின் மூன்று வயது மகள் மெல்ல என் அருகே வந்தாள் என்னைச் சுரண்டிவிட்டு என் மடியில் படுத்துக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து சித்தப்பா…சித்தப்பா… என்று அழைத்தாள் ம்… என்றேன், என் முகத்தைப் பார்த்து சிரித்தாள், சொல்லும்மா… என்றேன், சிரித்துக் கொண்டே பசிக்குது சித்தப்பா…, இட்லி வேணும் என்று கையை நீட்டி இட்லி இருக்கும் இடத்தைக் காட்டினாள் அந்த நிமிடம் அந்த வலியை நான் உணரவில்லை.ஆனால் அது இன்றும் வலிக்கிறது பசியை சிரித்துக் கொண்டே சொன்ன குழந்தையை குடிகாரனின் வீட்டில்தான் பார்க்க முடியும். பெரும் செல்வந்தர்களின் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு குடிகாரன் ஒரு நள்ளிரவில் பிணத்தின் மீது நடத்திய குரூரமான வெறியாட்டத்தைக் கண்டு ஊரே மிரண்டுபோனது. அன்று இறந்து போன அந்த குடிகாரனின் 90 வயது பாட்டியின் பிணத்தை தூக்க போராடக் கொண்டிருந்தான் தடுக்கப் போனவர்களை நாகூசும் வார்த்தைகளைப் பேசி விரட்டியடித்தான். நடுவீட்டில் கிடத்தி வைத்திருந்த பிணத்தை தூக்கிவந்து வீதியில் வீசிவிட்டு பிணத்துக்குக் காவலாக கத்தியோடு அமர்ந்து கொண்டான் இறந்தவருக்கு செய்யவேண்டிய சடங்குகளைக் கூட செய்யமுடியவில்லை. அனாதைகளின் பிணங்களைக் கூட கண்ணியமாக நடத்துகிறார்கள் ஆனால் ராணிபோல் வாழ்ந்தவரின் பிணம் விடிய விடிய வீதியில் கிடந்தது. என் வாழ்நாளில் இது போன்ற ஒரு துயரமான நிகழ்வை இன்று வரை நான் சந்திக்கவும் இல்லை இனி நான் சந்திக்கவும் கூடாது. குடிகாரன் குழந்தைகளையும் முதியவர்களையும் மட்டுமல்ல பிணங்களைக் கூடத் துன்புறுத்துகிறான். ஒரு தீபாவளி அன்று நள்ளிரவில் பழனி பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், திடீரென்று அங்கிருந்தவர்களை பார்த்து யாரு இன்னைக்கு என்கூட படுக்க வர்றது என்று ஆங்கிலத்தில் கேட்கிறாள் நீ வர்றயா…? நீ வர்றயா…?? என்று கைநீட்டி அழைக்க ஆண்கள் தலை தெரிக்க ஓடினார்கள். பார்க்க அழகாகவும் நல்ல குடும்பத்து பெண்ணாகவும் தெரிந்தார் ஆனால் கடும் போதையில் இருந்தாள். அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் அந்தப் பெண்ணை விரட்டுகிறார், அப்ப நீங்க வாங்க என்று அவரையும் அழைக்க ஏதும் பேச முடியாமல் கூட்டத்தை விரட்டி கொண்டே அவரும் ஓடி மறைந்து விட்டார். நீண்ட நேரமாக கத்திக் கொண்டே இருந்த அந்த பெண்னைக் காணவில்லை என்ன நடந்திருக்கும் என உங்களுக்குத் தெரியாதா? யார் அவள்? ஏன் இப்படியானாள்? கணவன், குழந்தைகளை விட குடி எப்படி முக்கியமாகி போனது? குடியை கொண்டாடும் சினிமா இந்த அசிங்கங்களை ஏன் மறைக்கிறது? அது தான் இந்த பூக்கடை சினிமா.

அரசு சினிமா சாராயம் மற்றும் மக்கள்

வணக்கம் நான் வேகிபழநிசாமி பேசுகிறேன். சினிமாவின் உண்மையான முதலாளிகள் மக்கள்தான். அம்முதலாளிகளிடம் நேரடியாக வாய்ப்புக் கேட்கும் முதல் சினிமா தொழிலாளி நானாகத்தான் இருப்பேன். நான் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக மக்களை தயாரிப்பாளர்களாக்கி மக்கள் சினிமா கம்பெனி மூலம் தமிழ் மக்களின் வாழ்க்கையை இழி நிலைக்கு கொண்டு சென்ற குடியையும் குடி நோயாளிகளையும் பற்றிய கதையைக் கருவாக்கி பூக்கடை என்ற படத்தை தயாரித்து நான் தமிழில் இயக்கப்போகிறேன். இந்த முயற்சிக்கு மக்களாகிய நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் உங்கள் உதவி இல்லாமல் நிச்சயம் இதை நான் செய்ய முடியாது. தயாரிப்பாளரே இல்லாமல் ஒரு படத்தை எடுக்க முடியுமா? அதற்கு நாங்கள் எப்படி உதவி செய்ய முடியும்? என்று ஆயிரம் கேள்விகள் உங்கள் முன் நிற்கலாம், அதற்கு என்னுடைய ஒரே பதில் நிச்சயம் நம்மால் முடியும். உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை, நீங்கள் பார்த்த அவலங்களை, உங்களுக்கு நினைவு படுத்துகிறேன் அவ்வளவுதான் நானாக எதையும் சொல்லவும் இல்லை இதை நான் எழுதவும் இல்லை. நாளிதழ்களில் மேம்போக்காக தலைப்புச்செய்திகளை மட்டும் படித்துவிட்டு செல்வதை தவிர்த்து சற்று கூர்ந்து படித்தால் அதில் ஒரு செய்தி அல்லது ஒரு நிகழ்வு ஒளிந்திருக்கும் அது எதனை வெளிப்படுத்த முனைகிறது அதன் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் இக்கட்டுரையை படிக்கக்கூடாதவர்கள் படித்தால் அவர்களுக்கு இதில் எந்த தகவலும் கிடைக்கப்போவதில்லை. குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உயிருக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மட்டும் இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கலாம் குடிப்பதும் குடியைக் கொண்டாடுவதும் சரியென நினைப்பவர்கள் தயவுசெய்து அடுத்த செய்திக்கு சென்றுவிடுங்கள். அவர்களிடம் சொல்வதற்கு என்னிடம் எந்தத்தகவலும் இல்லை. மக்களுக்கும் அரசுக்குமான உறவு தாய்ப்பூனைக்கும், குட்டிக் குரங்குக்குமான உறவுபோல இருக்கவேண்டும். ஆம் பூனை தன் குட்டியை பாதுகாக்க வாயில் கவ்விக்கொண்டே போகும் குட்டி வளரும் வரை அது குறித்த எல்லாப் பொறுப்புகளையும் தாய் பூனையே ஏற்றுக்கொள்ளும் ஆனால் குரங்கு விஷயத்தில் இது நேர்மாறாக இருக்கும் குட்டிக்குரங்குதான் தாயின் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொள்ளும் தாய்க்குரங்கு கவலையே படாது மக்களின் பாதுகாப்பான ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதில் அரசு தாய் பூனையாகவும் அரசை பின்பற்றுவதில் மக்கள் குட்டிக்குரங்காகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு அரசு மக்களை தாய் பூனையாக பாதுகாப்பதும் இல்லை மக்கள் குட்டிக்குரங்காக அரசை பின்பற்றவும் முடிவதில்லை ஏனென்றால் அரசு மக்களை குடிக்கவைத்து குறுக்கு வழியில் அழைத்துச் செல்கிறது.

 

Ticket Booking Rs.100/-

Please transfer the total amount to the following bank account.

Get Your Special Ticket on NEFT Payment. Use Code : neftpay


Account Details-BANK OF INDIA

Account Name: Makkal Cinema Company

Account No: 824720110000068

Account Branch: Palani

Account Type: Current Account

IFSC Code: BKID0008247

Contact us

Head Office :

MAKKAL CINEMA COMPANY.,
NO:102,2ND FLOOR,
12TH STREET,2ND SECTOR,
KK NAGAR,
CHENNAI-600078
TAMILNADU(INDIA)

 

 

Permanent Address :

MAKKAL CINEMA COMPANY.,
NO:117 BANGALA ST NEIKKARAPATTI,
PALANI-624601,
DINDIGUL (DT),
TAMILNADU(INDIA)

 

 

Phones :

  • Mobile: +91-94440-35890

 

 

E-mail : makkalcinemacompany@gmail.com

Send Mail